தஞ்சை ஏப்ரல் 12 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார் சட்டமன்றத் தேர்தலில் சுமுகமாக நடைபெற்று அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் உரிய பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது அவ்வப்போது நானும் மாவட்ட எஸ்பி அந்தந்த பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகிறோம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் முகவர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது மாநில காவல்துறை மாநில சிறப்பு காவல் படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கண்காணிப்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 15 வகையான கொரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் அனைவரும் உயிர் கவசம் அணிந்து வந்திருந்தனர் அதற்காக மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் தேர்தல் பணியில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல் அலுவலர்கள் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை