தஞ்சை மார்ச் 31 தஞ்சைக்கு சுற்றுலா வந்த கோவை பொறியாளர் கார் திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது, இந்த விபத்தில் யாரும் காயமின்றி உயிர் தப்பினர், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் சுரேஷ்குமார் வயது 43, இவர் தனது மனைவி, மாமனார், மாமியார் 12 வயது மகன் எட்டு வயது மகள் ஆகிய உடன் சுற்றுலா வந்தார், நேற்று முன்தினம் திருச்சி வந்த இவர்கள் அங்கு உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.

பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர், தஞ்சை திருச்சி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது அவர்கள் வந்த காரின் முன் பகுதியில் லேசான புகை வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார் அவசர அவசரமாக காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர் இந்த நிலையில் புகை வந்த காரணத்தை சுரேஷ்குமார் திறக்க முயன்றார் ஆனால் அதற்குள் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் மனோஜ் பிரசன்னா துணை தீயணைப்பு படை அலுவலர் இளஞ்செழியன் நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது இச்சம்பவம் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் படிப்பதற்கு முன்பே காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி விட்டதால் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கார் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை