தஞ்சை ஜன.03, மீண்டும் கடலோர மாவட்ட மக்களை அச்சுறுத்தும் மழை, பனிக்காலமான ஜனவரி மாதத்திலும் மழை பெய்து மக்களை மிரட்டி வருகின்றது, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் முடிய வேண்டும், ஆனால் அது இன்னமும் தொடர்கிறது தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் அதேபோல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இந்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

செய்தி ம.செந்தில்குமார்.