தஞ்சை மே 08: அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அ‍ணையில் கையெழுத்திட்டார், இதற்கு ஏஐடியுசி ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்தனர்!.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில், முதலில் அரிசி அட்டைதார் களுக்கு நான்காயிரம் ரூபாய், இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் நகர பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இலவசமாக பெண்கள் பயணம் செய்யலாம் என்ற நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சி அமைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள மாண்புமிகு சி வி. கணேசன் , மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ராஜ கண்ணப்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், .அதேபோல மனித நேய மாண்பாளர்களான இறையன்பு ஐஏஎஸ் அவர்களை தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கும் , முதல்வரின் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் இந்தியஆட்சிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கும் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

வருவாய்க்கும் செலவினத்திற்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இதனால் தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் தங்களுடைய பணப் பலன்களையும் , உரிமைகளையும் இழந்து வந்திற்கின்றனர். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களுக்கு சேவை செய்கின்ற ,அரசின் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துகின்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்யவும், பயணக் சேவையை மேம்படுத்தவும் , போக்குவரத்து கழகத்தை பாதுகாக்கவும் வேண்டுவதாகவும்.

அதேபோல போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை நிறை வேற்றிடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், ஓய்வு பெறும் நாளன்றே அவர்களுடைய பலன்களைப் பெற்றிடவும், சுமார் 65 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவதுடன், அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்கிடவும், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வாரிசு பணிக்காக காத்திருக்கும் பணியின் போது இறந்து போன ஆயிரக்கணக்கான குடும்பங்களின் துன்ப நிலையை உணர்ந்து உடன் வாரிசு பணி வழங்கிட நடவடிக்கை எடுக்கவும்.

மேலும் அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் ஏஐடியுசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். தொழிலாளர்களின் துயரங்களை துடைத்திட வேண்டுகிறோம் .

மேலும் தாங்கள் உறுதி அளித்தவாறு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட வேண்டுகிறோம். தங்கள் நல்லாட்சி தொடர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களும் , ஓய்வுபெற்ற தொழிலாளர்களும், அவர்கள் குடும்பத்தினர்களும் என்றும் உறுதுணையாக உங்களுக்கு இருப்பார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் ,மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. அப்பாத்துரை மற்றும் ஏ ஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் ஆகியோர் இன்று வாழ்த்துக்கள் அடங்கிய கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.