தஞ்சை: 6, தஞ்சாவூர் ஆற்று பாலம் அருகில் சிஐடியு சங்கத்தின் நாடு தழுவிய மறியல் போர் மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் நடந்தது மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ,
மாவட்ட துணை செயலாளர் அன்பு, மற்றும் விசை மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண், பெண் தோழர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவசாயத்தை பாதுகாப்போம், பொதுத்துறையை பாதுகாப்போம், இயற்கை வளங்களை கார்பரேட் கம்பெனிக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ரயில் நிலையத்தை முற்றுகையிட கோஷங்கள் எழுப்பி புறப்பட்டனர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியல் செய்து, மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்,தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலிஸ்சார் அனைவரையும் கைது செய்தனர்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்