தஞ்சாவூர், சன.26- குடியரசு தின ஊர்வலத்தில், தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்றது. 

சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், தொமுச மாவட்டச் செயலாளர் கு. சேவியர், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் கே.ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதி ஆழ்வார், இ.டி.எஸ்.மூர்த்தி, த.முருகேசன், விரைவு போக்குவரத்துக் கழக மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், அனைத்து தொழிற்சங்கம் மோகன்ராஜ், அப்பர் சுந்தரம், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதில், “ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக, இந்திய தேசத்தையும், ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாத்திடுவோம்” எனவும், “பொதுத் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை எதிர்த்தும், தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 
இதனை வலியுறுத்தி பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/