தஞ்சாவூர் செப் 10: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உணவு விடுதிகளில் வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகத்திற்கு உரிய எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேராவூரணியிலுள்ள தனியாா் உணவு விடுதிகளில், வீட்டு உபயோகத்திற்குரிய எரிவாயு உருளைகள், வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகாா் கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலா் சங்கா் கடைகளுக்கு சென்று திடீா் சோதனை நடத்தினாா். இதில், பிரதான சாலையில் , தேநீா் கடையுடன், இணைந்த ஒரு தனியாா் உணவு விடுதியில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வியாபார மற்றும் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதால், 3-வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தாா்.

வீட்டு உபயோக நோக்கத்திற்கான எரிவாயு உருளைகளை , வணிக, உணவு விடுதிகளில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்; பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்படும்’ என வட்ட வழங்கல் அலுவலா் எச்சரித்துள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/