தஞ்சை ஜன.29–

தஞ்சையில் எம்.சிவகுமார் எழுதிய ‘”சினிமா ஒரு அற்புத மொழி” நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தஞ்சை மாவட்டக்குழு சார்பில், சரோஜ் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. 

தமுஎகச மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் .விஜயகுமார், மாவட்டப் பொருளாளர் .சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிம்பம் சாகுல் வரவேற்றார். தமுஎகச கௌரவத் தலைவர் எழுத்தாளர் .தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட, கல்வியாளர் புனிதா கணேசன், தஞ்சை செழியன், எழுத்தாளர் முத்தமிழ் விரும்பி, மறைதிரு ஆரோக்கிய தாஸ் ஆகியோர் “சினிமா ஒரு அற்புத மொழி நூலை ” பெற்றுக் கொண்டனர். 

தமுஎகச பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். தமுஎகச திரைப்பள்ளி முதல்வரும், நூலாசிரியருமான எம்.சிவக்குமார் ஏற்புரையாற்றினார். தமுஎகச மாநகரச் செயலாளர் பாரி சிவன் நன்றி கூறினார்.

செய்தி க.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை