தஞ்சாவூர் டிச 25: மிகவும் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பிறப்பை கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடைகள் அணிந்து தங்கள் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பேராலயத்தில் குடில் அமைக்கப்பட்டு, ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் மின்னியது. நேற்று நள்ளிரவு பூண்டிமாதா பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பாக்கியசாமி தலைமையில், துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் சாம்சன், உதவித்தந்தையர்கள் இனிகோ, ஜான்சன் ஆகியோர் அருளானந்தம் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இயேசு பிறப்பை அறிவித்து பேராலய அதிபர் பாக்கியசாமி இறை பாடல்களுடன் குழந்தை இயேசுவை பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தார்.

தொடர்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து காலையிலும், மாலையிலும் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/