தஞ்சாவூர், டிச.24- தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 30ந்தேதி நடைபெறுகிறது. இந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற் கொண்டனர்.

தஞ்சையில் வருகிற 30-ந்தேதி(வியாழக்கிழமைநலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா மன்னர் சரபோஜிகல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்து
கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் கலந்து கொள்வதற்காக அவர் 29-ந்தேதி இரவு தஞ்சை வருகிறார். முதல்-அமைச்சர்,பங்கேற்கும் விழா நடைபெறும் சரபோஜி கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் வையிட்டு பொன்ராஜ் ஆலிவர் நேரில் மேலும் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார், மேலும்விழா நடைபெறும்இடத்தில் அமைக்கப்பட்டுவரும் பந்தல்,பொதுமக்கள் வந்து செல்லும் பாதை,பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.,
கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நலஅலுவலர் டாக்டர் நமச்சிவாயம்,
உதவி பொறியாளர் கார்த்தி இதே போல் விழா நடைபெறும் இடத்தைதிருச்சிமத்தியமண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர்வந்து செல்லும்வழித்தடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வுசெய்தார். அப்போது தஞ்சைடி.ஐ.ஜி. பிரவேஷ்குமார்,போலிஸ், சூப்பிரண்டு ரவளிபிரியாஆகியோர் உடன்இருந்தனர். இதே போல் தஞ்சைமாவட்ட தி.மு.க.அலுவலக
மான கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி, அண்ணா ஆகியோர் முழு உருவசிலைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 29ந்தேதி,திறந்து வைக்கலாம்,என
கூறப்படுகிறது. இதையடுத்து சிலைஅமைக்கப்பட்டுளள, இடத்தையும் போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/