தஞ்சாவூர் டிச, 11-தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை விண்ணப்பங்களுக்கான சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் குறைகளுக்கான விண்ணப்பங்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தீர்வுகாண உள்ளது அதன்படி தஞ்சை மாவட்டத்தில் வருகிற 13-ஆம் தேதி திங்கட்கிழமை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கூர் பூங்கொடி திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவிலும், பட்டுக்கோட்டை குமரன் திருமண மண்டபத்தில் காலை 11 மணியளவிலும் அதிராம்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் காலை 12 மணியளவிலும், நடைபெற உள்ளது.

பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமகளூர் முருகன் கோவில் திடலில் மதியம் 2 மணி யளவிலும், பேராவூரணி குணசேகரன் திருமண மண்டபத்தில் மாலை 4 மணி அளவில் கொள்ளை காடு கேபிஎஸ் திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவிலும், நடைபெறவில்லை 15ம் தேதி செவ்வாய்க்கிழமை) தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவிலும், வல்லம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் காலை 11 மணியளவிலும் நாஞ்சிகோட்டை வாழ்வின் திருமண மண்டபத்தில் மதியம் 12 மணியளவிலும், அம்மன்பேட்டை எம்ஜிஆர் திருமண மண்டபத்தில் மதியம் 1, மணியளவிலும், நடைபெற உள்ளது.

திருவையாறு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறு சகாயமாதா திருமண மண்டபத்தில் மாலை 3 மணியளவிலும்,திருக்காட்டுப்பள்ளி ஜெய் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் மாலை 4 மணியளவில், பூதலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவிலும் செங்கிப்பட்டி ஓவியா திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவிலும் முகாம் நடைபெற உள்ளது எனவே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய குறைகளை துறை ரீதியாக தனித்தனியாக மனுக்களாக வழங்கி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,அளித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/