தஞ்சாவூர் 18-தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கையால் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை விரைவில் துவங்க உள்ளது என்று எம்பி பழனிமாணிக்கம் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பயணியர் மாளிகையில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது 2012ஆம் ஆண்டு மயிலாடுதுறை- காரைக்குடி வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து பிராட்கேஜ் பாதையாக போடப்பட்டது.

சுமார் 10 ஆண்டு காலம் முடிந்து இந்தத் திட்டம் நிறைவேறியது, தொடங்கிய இரண்டு ஆண்டு காலமாக கொரோனா மற்றும் ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில்வே கேட்களுக்கு கேட்கீப்பர்கள் போடுவதில் ரயில்வே நிர்வாகம் ஒரு முடிவு எடுக்க முடியாத நிலையில் நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டது.

அண்மையில் நாகப்பட்டினம் எம்.பி., செல்வராஜ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து உடனடியாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதன் பேரில் தமிழக முதல்வர் உடனடியாக ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதற்கான ஆட்களை நியமித்து சேவையை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது பேரில் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

வரும் 22ஆம் தேதி திருச்சியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தையும் விரைவில் இந்த தடத்தில் ரயில் சேவையை தொடங்குவதற்கான முடிவையும் எடுப்பதற்கான கூட்டத்தை கூட்டியுள்ளார் இதற்காக தொகுதி மக்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எங்கள் சார்பாகவும் இந்த ரயில் சேவையை தொடங்கியதற்காக தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார் என்பது பட்டுக்கோட்டை எம். எல். ஏ. அண்ணாதுரை தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதிபாலசுப்பிரமணியன் மற்றும் பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/