தஞ்சை ஏப்: 26! “மதுரை செல்லும் தேஜாஸ் விரைவு சொகுசு ரயில் சென்னை எழும்பூரில்  காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 9.55 மணிக்கு வந்தடைகிறது.  இந்த ரயிலில் பயணிக்கும் டெல்டா மாவட்ட பயணிகள் திருச்சியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து ஜன சதாப்தி ரயில் மூலம் தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வந்தடைந்தனர்.  இந்நிலையில் விழுப்புரம்-தஞ்சாவூர் ரயில் பாதை மின்மயமாக்கபட்டத்தை அடுத்து  வகையில் சோழன் சிறப்பு ரயில் வண்டி வேகத்தை சற்று அதிகரித்து திருச்சியில் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்தி தேஜஸ் சிறப்பு ரயில் வண்டிக்கு இணைப்பு கொடுக்க தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் திருச்சி ரயில்வே கோட்ட  அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் கோரிக்கை விடுத்திருந்தது. 

இதையடுத்து வரும் 1.5.2021 முதல் வண்டி எண் 06796 திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் சிறப்பு ரயில் வண்டி திருச்சியிலிருந்து காலை 10 மணிக்கு பதிலாக 10.10 மணிக்கு புறப்படுமாறு கால அட்டவணையில்  ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.


இதனால் டெல்டா பகுதி பயணிகள் வியாழன் தவிர மற்ற நாட்களில்  சென்னையிலிருந்து காலை 6.00 மணிக்கு தேஜாஸ் சிறப்பு ரயிலில்  புறப்பட்டு காலை 9.55 க்கு திருச்சி வந்தடைந்து அங்கிருந்து 10.10 மணிக்கு புறப்படும் சோழன் சிறப்பு ரயில் வண்டியில் ஏறி தஞ்சாவூர்  (10.58 am) பாபநாசம்(11.19 am) கும்பகோணம் (11.33 am) மற்றும் ஆடுதுறை (11.46 am) ஆகிய டெல்டா பகுதிக்கு விரைவாக வந்தடையலாம். 

அண்மை காலமாக இந்திய ஒன்றிய அரசின் இரயில்வேத் துறை சாமன்ய மக்கள் அதிகம் பயன்படுத்தும் மற்றும் பயன்பெறும் குறைந்த கட்டண இரயில் போக்குவரத்தினை நிறுத்தி வருவதோடு, இது போன்ற சொகுசு இரயில்களை இயக்கி வருகின்றன, இது பின்னர் தனியார் துறைக்கு தருவதற்கு ஏதுவாக செயல்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.