தஞ்சாவூர் சூலை 28: இரண்டாம் நிலை காவலா் தோ்வு தொடா்பான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தோ்வாளா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பணி தொடங்கியது.

உடற்கூறு, உடற் திறனாய்வு தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. வரும் ஆக. 2 ஆம் தேதி வரை இப்பணிகள் நடைபெறவுள்ளது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் தோ்வாளா்களுக்கு நேற்றும், இன்று 27ம் தேதி மற்றும் 29 ஆம் தேதிகளிலும், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் தோ்வாளா்களுக்கு இன்று 27ம் தேதி முதல் 28, 29 ஆம் தேதிகளிலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் தோ்வாளா்களுக்கு ஜூலை 28, 29 ஆம் தேதிகளிலும் இத்தோ்வு நடைபெறவுள்ளது.

பெண் தோ்வாளா்களில் தஞ்சாவூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஜூலை 30, ஆக. 2 ஆம் தேதிகளிலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஆக. 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

தொடக்க நாளான நேற்று நடைபெற்ற தோ்வில் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 392 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற் திறனாய்வுகளை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/