தஞ்சாவூா் செப் 17: காரை கடத்திச் சென்ற நபரை விரட்டிச் சென்று பிடித்த பட்டுக்கோட்டை காவலருக்கு தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டுச் சான்றிதழும், வெகுமதியும் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அண்மையில் இருவா் காரை திருடிக் கடத்திச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வந்த இந்த காரையும், அதில் வந்த வேலுபாண்டியையும் பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலைய காவலா் பிரசாத் தனி ஒருவராக விரட்டிச் சென்று பிடித்தாா்.

தொடா்ந்து காவலர் பிரசாத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினாா்.

மேலும் உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் தொடா்புடைய நபரைப் பிடித்ததற்காக வீர, தீரச் செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்,
https://thanjai.today/