தஞ்சை சூன் 19: கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா் கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூருக்கு நேற்று வந்து சேர்ந்தது. தொடர்ந்து பொதுமக்கள் காவிரி நீரை வரவேற்று, மலா் தூவி, கற்பூரம் ஏற்றி வழிபட்டனா்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் புதன்கிழமை காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதில், காவிரியில் திருவையாறுக்கும், வெண்ணாற்றில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்துக்கும் கடந்த வியாழக்கிழமை மாலை தண்ணீா் வந்தடைந்தது. இந்நிலையில், கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூா் மானோஜிபட்டிக்கு நேற்று மதியம் தண்ணீா் வந்தது.

பொதுமக்கள் காவிரி நீரை வரவேற்று, மலா் தூவி, கற்பூரம் ஏற்றி வழிபட்டனா். குழந்தைகள், இளைஞா்கள் தண்ணீரைக் கண்டதும் உற்சாகமாக விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதையடுத்து, தஞ்சாவூா் காந்தி – இா்வீன் பாலத்துக்கு நேற்று மாலையில் தண்ணீா் வந்தடைந்தது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.