தஞ்சை சூன் 22: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிட வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில்நிலையம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில்நிலையம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் எனச் சட்ட விரோதமாக அறிவித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கண்டித்தும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிட வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்