பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் நகர் புறங்களில் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை என்று பேசுவதைப் பொய்யாக்கும் விதமாக தஞ்சையின் நகரின் பலப்பகுதிகளில், மாடுகளுக்கு போடும் நெட்டி மாலைகள், புதிய தாம்புக் கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் வெகு விமர்சையாக விற்பனையாயின.
மக்கள் ஆவலுடன் தங்களது இல்லங்களில் வளர்க்கும் மாடுகளுக்காக வாங்கிச் சென்றனர், மாட்டுப் பொங்கலன்று தங்களது மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து அதற்கு ஊட்டியபின்னரே தாங்கள் உண்பது வழக்கம், அந்த பழக்கம் மாறாமல் மக்கள் எப்போதும் பின்பற்றி வருகின்றனர்.
செய்தி ம.செந்தில்குமார்