தஞ்சை ஏப்ரல் 19 பாபநாசம் தாலுகாவில் அனுமதியின்றி மணல் ஏற்றிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் வட்டாட்சியர் முருகவேல் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சரவணன், பாலசுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், சதீஷ்குமார், ஆரோக்கியபவுல்ராஜ், சிவப்பிரகாசம், அன்பரசு, கதிர்வேல், ராஜ்குமார், ஜோதி, பாண்டியன் ஆகியோர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சரபோஜி ராஜபுரம் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 2 மாட்டு வண்டிகள் மற்றும் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் என மொத்தம் 6 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் ரோந்து வருவதை கண்டவுடன் மணல் அள்ளி கொண்டு இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.