தஞ்சை ஏப்ரல் 24 தஞ்சை தெருக்களில் சுற்றித்திரிந்த கொரோனா நோயாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை புதுப்பட்டினம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி ஒருநபருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தாா். இதனால் நோய் பரவல் ஏற்படும் என்று தெரிந்தும் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை நகரக் கிழக்கு காவல் நிலையத்தில் புதுப்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் புகாா் செய்தாா். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபா் மீது கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இத்தகவலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது; கொரோனா தொற்று காரணமாக இரவு நேரத் தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்து நோய் பரவலைத் தடுக்கக் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.