தஞ்சை மார்ச்28 தமிழ்நாட்டிலிருந்து பாஜகவை விரட்டியடிப்போம்! மக்கள் அதிகாரம் சார்பில் பிரச்சார இயக்கம் தஞ்சாவூரில் நடைபெற்றது . மக்களுக்கெதிரான, தொழிலாளர்களுக்கான, விவசாயிகளுக்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான ,நாட்டின் உழைப்புவளம், இயற்கை வளம் கனிம வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கின்ற, மதநல்லிணக்கத்திற்கு எதிரான, தமிழ்நாட்டின் தாய்மொழி வழிக்கல்வி உள்ளிட்டு, தமிழ் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற, பண்பாடு, கலாச்சாரத்தைசீரழிக்கிற, காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றுகின்ற ஹைட்ரோகார்பன் , மீத்தேன் ,ஷேல் கேஸ் உள்ளிட்ட அழிவு திட்டங்களையும், கடலோர வளங்களை அழித்து மீனவர்களை வெளியேற்றுகின்ற சாகர்மாலா- பாரத்மாலா திட்டங்கள், கூடங்குளம் அணு உலை தேனி நியூட்ரினோ அணுக்கழிவு மையம்

உள்ளிட்ட கொலைகார திட்டங்களை அமல்படுத்தி தமிழ்நாட்டின் உரிமை களை பறித்தும்,இயற்கை-கனிம வளங்களை கொள்ளையடித்தும் வருகின்ற காவிகார்ப்ரேட் பாசிச பாஜக மற்றும் அதன் அடிமை அதிமுக கூட்டணி கட்சிகளையும், மறைமுக ஆதரவு பாஜக மக்கள் நீதி மையம் ,நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளையும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்போம்.

கார்ப்பரேட் காவி பாசிச பாஜக வை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம் என வலியுறுத்தி மக்கள் அதிகாரத்தின் சார்பில் நேற்றைய தினம் இரவு கீழவாசல் , சிவகங்கை பூங்கா அருகிலும் பிரச்சார கூட்டம் நடைபெற்றது .மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், நிர்வாகிகள் தேவா, அருள் ,மக்கள் கலை இலக்கியக் கழகம் ராவணன் இடதுசாரி பொதுமேடையின் ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தோழர் சேவையா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.