தஞ்சாவூர் செப் 16: அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநருக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் ஜெபராஜ் நவமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலத்தில் தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியங்கிவியல்) 2019, 2020, 2021-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து ஓராண்டு தொழிற் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.

விண்ணப்பங்களை இணையவழி மூலமாக அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/