தஞ்சை சூலை 13: கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தஞ்சையில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 9 மணி வரை செயல்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் ஏற்கனவே இருந்த தளவர்வுகளுடன் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

ஏற்கனவே இரவு 8 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.

தஞ்சை புதுபஸ்ஸ்டாண்ட் பகுதி, தெற்கு வீதி, கீழவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உணவகங்கள், டீக்கடைகள், நடைபாதை கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள் பேக்கரி உள்ளிட்ட கடைகள் வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை செயல்பட்டது. இதேபோல் நகைக்கடைகள், ஜவுளி கடைகளும் செயல்பட்டன.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/