இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா முழு அடைப்பு, ஊரடங்கு, மக்கள் தங்கள் ஊர்களை நோக்கி நடந்தே போகும் காட்சி என இயற்கையின் மோசமான தருணங்களும் மக்களின் இயலாத நிலைய‍ையும் நாம் நவம்பர் வரை பார்த்தாகி விட்டது.

இப்போது மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்குவதனி அடையாளமாக பொது பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கத் தொடங்கப்பட்டது, பின்னர் மாவட்டம் தாண்டி இயக்கப்பட்டது.

இப்பொழுது பேருந்துகளில் 100 சதவீத இருக்கை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது தமிழகத்தில் உள்ள மாநில போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கும் இருக்கைகளில் ஏற்கனவே குரானா தொற்றினால் 60 சதவீத அறிக்கைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது தற்போது 100 சதவீத இருக்கையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.

இதை எல்லா விதமான பேருந்துகளுக்கும் பொருந்தும் அதாவது போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்துகள் தொழிற்சாலை பேருந்துகள் மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரிப் பேருந்துகள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும் மற்றபடி குரானா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது