தஞ்சை ஜன: 13, தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலை 10:30 மணிக்கு புறப்பட்டு 11 மணியளவில் திருக்காட்டுப் பள்ளிக்கு வந்து, அங்கே பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை நோக்கி சென்ற வழியில் திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையில் வரகூர் பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.

ஆண்கள் பெண்கள் என 40 பேர் பயணம் செய்துள்ளனர் அங்கிருந்து 150 அடி தூரம் சென்றபோது எதிரே கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி சென்ற லாரிக்கு வழி விடுவதற்காக இடதுபுறம் பஸ்சை டிரைவர் ஒதுக்கி ஓட்டினார், அப்போது பலப்படுத்துவதற்காக சாலையோரம் போடப்பட்டிருந்த மண்ணில் பஸ் சக்கரம் சிக்கியது, கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சேறாகி இருந்த மண் உள்வாங்கியதால் பஸ் பக்கவாட்டில் சாய்ந்தது இதில் பஸ் உள்ளே சாய்ந்து அமர்ந்து இருந்த பயணிகள் இடதுபுறமாக சரிந்து விழுந்தனர்.

இதனால் சாலையோரம் மிக தாழ்வாக தொங்கிய உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியில் பஸ்ஸின் மேற்கூரை உரசியது பஸ்ஸின் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது இதில் அவர்கள் மயங்கி விழுந்தனர் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வர ஒரு பஸ் நிறுத்தம் மற்றும் சாலையில் சென்றவர்கள் ஓடிவந்து பார்ப்பதற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகளை அப்பகுதி மக்கள் குடியிருந்து வெளியே இழுத்து விட்டனர், சிலர் வலது புறம் ஜன்னல் வழியாக பஸ்ஸில் இருந்து குதித்துள்ளனர், அதற்குள் மின்சாரம் தாக்கி கரூரை சேர்ந்த கணேசன் வயது 55, கல்யாணராமன் வயது 50, நடராஜன் 45, வரகூர் பழைய குடியானத் தெரு மணிகண்டன் மனைவி கௌசல்யா வயது 30 ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவலறிந்த நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, எஸ் பி எஸ் வி சேகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விபத்திற்குள்ளனவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று திரும்பினார் விபத்து நடந்ததும் தப்பி ஓடி பஸ் டிரைவர் ஜான் பிலோமின் ராஜ் ( 56  )கண்டக்டர் மணிகண்டன்(30), ஆகியோர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இதுதொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து கவனக்குறைவாக பஸ்சை ஓட்டிய டிரைவர் ஜான் பிலோமின் ராஜாவை கைது செய்தனர், தகவலறிந்த மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் (பொ) ரவி மின்வாரிய செயற் பொறியாளர் சேகர், மற்றும் இளநிலை பொறியாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் மின்கம்பம் சாய்ந்ததால் மின் கம்பிகள் கீழே தாழ்வாக தொங்கி இச்சம்பவம் நடந்துவிட்டது, உடனடியாக மின் கம்பிகள் சீர் செய்யப்படும் என்றனர்.

தொடர்ந்து திருவையாறு தி.மு.க, எம்எல்ஏ துரை சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பிரமணியன், ரத்தினசாமி , ரங்கசாமி திமுக ஒன்றிய செயலாளர் கௌதமன் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன் நீலமேகம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

ம.சசிகுமார், நிருபர்.
தஞ்சை