தஞ்சை மார்ச் 30 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கார் ஒன்று முற்றிலுமாக மதியம் இரண்டு முப்பது மணி அளவில்எரிந்துள்ளது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சர்பத் கடையில் சர்பத் சாப்பிடுவதற்காக அனைவரும் வண்டியை விட்டு இறங்கி குளிர்பானம் அருந்தும் வேளையில் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது, சுற்றியிருந்த அனைவரும் பயணியர் லக்கேஜ்களை கார் முற்றிலும் பற்றி எரிவதற்கு முன்பே எடுத்து விட்டனர்.

கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இது வரை தெரியவில்லை, உயிர் ‍சேதமின்றி தப்பியதால் பயணிகள் நிம்மதி, அருகிலுள்ள தமிழ் பல்கலைகழக காவல் துறை மேற்கொண்டு விசாரணையை மேற்க் கொள்ளும் என்று கூறுகின்றனர்

செய்தி ம.செந்தில்குமார் நிருபர்.
தஞ்சை.