தஞ்சாவூர் அக்: 15- லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி உள்ளிட்டோர் உருவ பொம்மைகள் எரிப்பு போராட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது திட்டமிட்டு ஒன்றிய அமைச்சரின் மகன் மற்றும் கொலையாளிகள் விவசாயிகள் மீது காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி, பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயத்துறை அமைச்சர் தோமர், படுகொலை சம்பவத்திற்கு காரணமான உபி முதல்வர் யோகிஆதித்தியநாத் உள்ளிட்டோர் உருவ பொம்மைகள் எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.


தஞ்சாவூர் ரயிலடி முன்பாகவும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணண் தலைமையில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் சாமி.நடராஜன், தாளாண்மை உழவர் இயக்கம் நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், மக்கள் அதிகாரம் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழக ராவணன் , சிபிஐஎம் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் என்.சுரேஷ்குமார், புதூர் ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர்,விவசாய தொழிலாளர் சங்கம் கே.பக்கிரிசாமி, சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் கே அன்பு,ரயில் கண்ணண், ஆதித்தமிழர் பேரவை எம்.பி.நாத்திகன்,சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன், எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்டோர் போராட்டத்தில் கைதாகினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/