பூதலூர் தஞ்சை மற்றும் திருச்சியிடையே அமைந்துள்ள மிகப்பழைய ரயில் நிலையம் உடைய ஊராகும், அதனை சுற்றியுள்ள கிராமத்தினர், தஞ்சைக்கோ, திருச்சிக்கோ செல்வதற்கும் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்லவும் பூதலூர் ரயில் நிலையம் மிக முக்கியமான சந்திப்பாகும்.

நீண்டகாலமாக பூதலூர் ரயில் நிலையம் இயங்கிய போதும் முன்பதிவு வசதி செய்ய முடியாத நிலையில் இருந்தது இதனால் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தஞ்சைக்கோ அல்லது திருச்சிக்கோ போகும் நிலை இருந்தது, தற்போது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும் நேற்று திறக்கப்பட்ட முன்பதிவு மையத்தில் முதல்நாளிலேயே ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்தனர், இது ‍குறித்து அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் எங்களுடைய நேரம் மற்றும் பணச்செலவும் இதனால் குறைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.