தஞ்சாவூர் ஆக:12- தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தி தஞ்சையில் வாகன பரப்புரை பயணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கிவைத்தார்.

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆக1 முதல் 7 வரை மாநிலம் முழுவதும் காணொளி காட்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு பிரச்சார வாகனத்தில் தொடங்கிவைத்தார்.

இதேபோல் கடந்த 2ஆம் தேதி சென்னையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பிரச்சார வாகனத்தில் தொடங்கி வைத்தார்.

பிரச்சார வாகனம் தஞ்சை மாவட்டத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வந்துள்ள பிரச்சார வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் தஞ்சை தற்காலிக பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் பொதுமக்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பரப்புரை வாகனம் ராஜா மிராசுதார் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சியில் ஆர்டிஓ வேல்மணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/