தஞ்சை சூலை 03 தஞ்சை பூண்டி இளவல் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் அய்யாறு வாண்டையார் (86) அவர்கள் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

பூண்டி வாண்டையார் என்று அழைக்கப்படும் துளசி அய்யா வாண்டையார் அவர்களின் தம்பியான இவர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1984ல் தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2001 ல் அதிமுகவில் சேர்ந்து திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினரானர் மிகக் குறுகிய காலம் தமிழ்நாட்டின் அமைச்சராகவும் விளங்கினார்.

பரம்பரிய மிக்க குடும்பத்தில் தோன்றிய இவர் பல்வேறு கெளர பதவிகளை வகித்தவர், தஞ்சை மண்ணின் புதல்வர், அவரது இறப்பு தஞ்சை வாழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

நிருபர் தஞ்சை டுடே
http://thanjai.today