தஞ்சை மார்ச் 06: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரஹ்மான் நகரில் அமைந்துள்ள புரவுசர் உலகம் புத்தக நிலையத்தில் இன்று மார்ச் 06 முதல் ஏப்ரல் 06 வரை ஒரு மாதத்திற்கு புத்தகக்கண்காட்சி துவங்கியது.

இக்கண்காட்சிக்கு குறள் நெறியாளர் கு.பரசுராமன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமை ஏற்க, புத்தகச்சந்தையை முனைவர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் மாண்பமை துணைவேந்தர் தமிழ் பல்கலைக்கழகம் அவர்கள் தொடங்கி வைக்க, ப.திருமாவேலன் அவர்கள் புத்தக விற்பனையைத் தொடங்கி வைக்கவும் செய்தனர்.

கண்காட்சியில் ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்” என்கின்ற நூலை அறிமுகம் செய்தும், நூலாசிரியர், எழுத்தாளர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்களை பாராட்டி பா. நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள்.

பிரவுசர் புத்தக நிலையம், மருத்துவக்கல்லூரிச் சாலை‍யில் இரஹ்மான் நகர், பிரகதி வளாகத்தில் அமைந்துள்ளது, கண்காட்சியை முன்னிட்டு 10 சதவீத கழிவுடன் புத்தகங்கள் விற்கப்படுகின்றன என்று புத்தக நிலையத்தாரும் புத்தகச்சந்தை ஏற்பாட்டாளர்களும் ‍தெரிவித்தனர். புத்தக நிலையத்தாரை 63831 81864 என்கின்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என் ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

செய்திகள் ம.ச‍ெந்தில்குமார்
https://thanjai.today/