தஞ்சாவூர் செப்.18. தஞ்சை மாநகரில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு
பிரவுசர் புத்தக உலகத்தின் சார்பில் மாபெரும் புத்தக கண்காட்சி தொடங்கியது.


தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், புத்தகக் கண்காட்சியை பூண்டி புஷ்பம் கல்லூரி ஆங்கில பேராசிரியர் இரா வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார்கள், கற்போம் பெரியாரியம், பெரியார் மலர்,
ஆகிய இரண்டு புத்தகங்களை குறள்நெறிச் செல்வர் மேனாள் அமைச்சர் மானமிகு சி. நா. மீ. உபயதுல்லா அவர்கள் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தொடக்கவுரை தஞ்சை இரா பெரியார் செல்வன் ஆற்றினார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினர் கு. அய்யாதுரை அவர்கள் உரையாற்றினார்.

மாநில மாணவரணி அமைப்பாளர் இரா செந்தூரபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அருள் சகாய குமார், அமமுக தஞ்சை மாவட்ட மாணவர் அணி செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் தமிழ்செல்வன்,கூட்டுறவு வங்கி மேலாளர் குழந்தை. கெளதமன், விடுதலை சுவையகம் உரிமையாளர் தமிழ்செல்வன், பொன்னாப்பூர்.குணசேகரன், வெல்லூர் சோ முருகேசன், குமரன் ஸ்டோர் உரிமையாளர் வீர சேகர் ஆசிரியர் சதீஷ்குமார் பிரகாஷ், தெற்கு நத்தம், க.சசிகுமார், தங்க.எழிலரசன் கலந்து கொண்டனர்.

விழாவில் நன்செய் பதிப்பகம் வெளியீட்டுள்ள பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” நூலினை 10000 பிரதிகளை தருவித்து விநியோகித்து வருவதை பாராட்டி ம.செந்தில்குமார் வீ2 சிஸ்டம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர் விழாவின் இறுதியில் ந மணிமொழி குணசேகரன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/