சென்னை புத்தகக்கண்காட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக புகழ் வாய்ந்ததாக அண்மைக் காலங்களில் அமைந்து வருகின்றது,
இதை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும், புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன.

‍அதன் தொடர்ச்சியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இராமநாதன் செட்டியார் மன்றத்தில் புத்தகக்கண்காட்சி தொடங்கியுள்ளது, இதில் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் நூற்கள், மற்றும் சிறந்த பதிப்பகத்தாரின் வெளியீடுகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன, இந்த புத்தகக்கண்காட்சியானது வருகின்ற மார்ச் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றுத் தெரிகின்றது.

புத்தக வாசிப்பு மற்றும் நேசிப்பாளர்கள் வருகை புரிந்து 10 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் நல்ல நூற்களை வாங்கி பயனடைய வேண்டுமாயி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

செய்தி பிராங்கி தஞ்சை