தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.

பூதலூர் அரசு மருத்துவமனை டாக்டர் உஷா நந்தினி ஆலோசனையின்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி ஏற்பாட்டில் நடந்த முகாமை மருத்துவ அலுவலர் பிர்லா பரிமளம் தொடக்கி வைத்தார். முகாமில் பொதுமக்களின் ரத்தவகை உட்பட பல பரிசோதனைகளை பூதலூர் அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புனர் கவிதா, பிரபாவதி ஆகியோர் மேற்கொண்டனர்.

ரத்ததானம் அளிக்க வந்தவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை நம்பிக்கை ஆலோசகர் ஆர்.புவனேஸ்வரி, தொடர்பு பணியாளர் திட்ட பணியாளர்கள் கே.தவமணி, தங்கலதா, தனலெட்சுமி ஆகியோர் செய்தனர்.

மருத்துவமனை செவிலியர் மைதிலி, சசிலா, என்சிடி பணியாளர் தன ஆரோக்கியமேரி, மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி ஆலோசகர் கண்ணன், பூதலூர் ஆனந்த் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி பொறுப்பாளர் ஜெயந்தி தேவையான பரிசோதனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். முகாம் ஒருங்கிணைப்பை சமூக சேவகர் புண்ணியமூர்த்தி செய்திருந்தார்.