தஞ்சாவூர் ஆக 16: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் நடைபெற்ற முகாமுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் சிக்கந்தா் அலி தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் நூருல் பஷீா் முன்னிலை வகித்தாா்.

பாபநாசம் வட்டாட்சியா் முருகவேள், காவல் ஆய்வாளா் அழகம்மாள் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். 30 கொடையாளிகளிடமிருந்து கும்பகோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக்குழுவினா் ரத்தத்தை பெற்றுச் சென்றனா்.

அமைப்பின் மாவட்ட மாணவரணிச் செயலா் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பாபநாசம் கிளைச்செயலா் முகமது ரபீக் வரவேற்றாா். பொருளாளா் முகமது இஸ்மாயில் நன்றி கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/