தஞ்சை மே 23, தஞ்சை மாவட்டத்தில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் திருச்சியை சேர்ந்த 6 பேர் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை (மியூகோமை கோஸிஸ்) என்ற நோய் பாதித்து “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்” மீண்டும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதன்படி இந்தியாவில் இதுவரை 8, 848 கருப்பு பூஞ்சை தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 40 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் இதன்படி தஞ்சை மாவட்டத்தில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு ஆண்கள் ஒரு பெண் இவர்கள் 5 பேரும் நலமுடன் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முத்து சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி மீனா (45), சீர்காழி கூட்டுறவு மருத்துக் கடை மருந்தாளுநரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், 24 மணி நேரமும் சிறுநீர் தொடர்ந்து வெளியேறியது. இவரது இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது இவருக்கு பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது தற்போது மீனா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனையில் 6 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மாதிரி சோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முடிவு இன்று தான் தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை