தஞ்சாவூர் ஆக :6, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து பாஜக சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது போலீஸ் தடையை மீறி நடைபெற்றது.

கர்நாடகவில் ஆளும் பி.ஜே.பி அரசு மேகதாதுவில் அணைக்கட்டியத் தீர்வோம் என்று கூறி வருகின்றது.

இந்த அணைக்கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த உத்திரவிடும் அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பது எல்லோரும் அறிவார்கள்.

இந்த உண்ணாவிரதம் இந்திய ஒன்றிய அரசின் அலுவலகத்திற்கு எதிராக நின்று போராடுவது தான் சரியாக இருக்கும், ஆனால் இவர்கள் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் இயங்கும் பனகல் கட்டிடத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தியதை உழவர்கள் இவர்கள் ஏன் தமிழ்நாடு அரசு அலுவலகத்திற்கு எதிராக போராடுகின்றார்கள் என்ற கேள்வியை கேட்டனர்.

உண்ணாவிரத மேடையில் தண்ணீர் அருந்தும் தொண்டர்

அ‍தேப்போல் இவர் மேகதாது கட்டுவதற்கு எதிராக பேசாமல் தமிழ்நாடு அரசியலின் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம் மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம், அவர்களுக்கு பதிலடியை சம்மட்டி அடிபோல கொடுக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

பி.ஜே.பி யை எதிர்த்து பேசினால் அவர்களது தொழிலில் கை வைப்போம் என்று பேசியுள்ளதை அங்கிருந்த பலரும் மூகம் சுழித்தனர்.

கர்நாடாகவில் ஆள்வதும் பி.ஜேபி, இந்திய ஒன்றியத்தை ஆள்வதும் பி.ஜே.பியாக இருக்கும் போது இவர்கள் யாரை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் என்று இந்த உண்ணாவிரதத்தை பார்த்தவர்கள் கேட்டார்கள்.

இது உண்ணாவிரத போராட்டமானாலும், உண்ணாவிரதத்திற்கு வந்த பலத் தொண்டர்கள் லெஸ்ஸி குடித்துக் கொண்டிருந்ததை பார்த்த அங்குள்ள மக்கள் உண்ணாவிரதத்திற்கு லெஸ்ஸி விலக்கு போல கேலியாக பேசி சென்றனர்

உண்ணாவிரத நேரத்தில் லெஸ்ஸி ஷாப்பில் குவிந்த பி.ஜே.பியினர்.

பொன். ராதாகிருஷ்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜா நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உட்பட பலர் பங்கேற்றனர். பாஜக உண்ணாவிரத போராட்டம் போலீஸ் அனுமதி இன்றியும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது தஞ்சை கிழக்கு போலீசார், நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

செய்தி க.சசிகுமார். நிருபர்
https://thanjai.today/