தஞ்சை ஏப்ரல் 13 பாட்டுக் கோட்டையார் என்று தமிழ் மக்களால் போற்றப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 91 வது பிறந்தநாள் இன்று கவிசார் பெருமக்களால் சிறப்பாக போற்றப்படுகின்றது, கல்யாணசுந்தரம் அவர்கள் 13 ஏப்ரல் 1930 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்கின்ற கிராமத்தில் அருணாச்சலாணார் மற்றும் விசாலாட்சி அம்மையாருக்கு இளைய மகனாக பிறந்தார்.

தனது 19 ஆம் வயதில் கவிதை எழுத தொடங்கியவர், அவருடைய கவிதைகளில் பெரிய உவமைகள் இல்லாமல் உள்ளதை அப்படியே உள்ளவாறு கூறுவதோடு அதனை எளிமையான நாட்டுப்புற பண்ணுடன் ‍எழுதியவர் அவர் தனது முதல் திரைப்பட பாடலை 1954 ஆம் ஆண்டு படித்த பெண் என்ற திரைப்படத்திற்காக எழுதினார்.

பொதுவுடமை சிந்தனையாளரான பட்டுக்கோட்டையார் காலத்தால் அழியாத தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப்பயலே…சின்னப்பயலே, .திருடாதே பாப்பா திருடாதே திரைப்பட பாடல்களை வளரும் இளைய தலைமுறைக்கு கொடையாய் கொடுத்த எளிய கவிஞர்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை