தஞ்சாவூர் செப் 12 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடந்தது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அனைத்து துறை மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் பேச்சு போட்டி கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி என தனித்தனியாக நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது இதில் கல்லூரி முதல்வர் மீது முதல்வர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இதில் சுமார் 50 மாணவிகள் கலந்துகொண்டனர்.

கவிதை போட்டிக்கான முதல் பரிசினை கணினி பயன்பாட்டியல் மாணவி சௌமியா பெற்றுக்கொண்டார் இரண்டாம் பரிசினை கணினி அறிவியல் துறை மாணவர்கள் பெற்றுக் கொண்டார் மூன்றாம் பரிசினை தமிழ் ஆண்டு இளங்கலை மாணவி கார்த்திகா பெற்றுக்கொண்டார் பேச்சுப்போட்டியில் முதல் பரிசினை கணினி அறிவியல் துறை மூன்றாம் மாணவி பொன்மணி பெற்றுக் கொண்ட இரண்டாவது பரிசினை மண்ணியல் மூன்றாமாண்டு மாணவன் கார்த்தி கேஸ்வரி பெற்றுக்கொண்டார் கட்டுரைப் போட்டியில் இரண்டு மாணவிகள் பரிசு பெற்றனர் முதற்பரிசு மூன்றாமாண்டு மாணவி வித்யா பாரதி பெற்றுக்கொண்டார் இரண்டாம் பரிசு மண்ணியல் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ அபிநயா பெற்றுக்கொண்டார் மேலும் இந்த நிகழ்ச்சி அலுவலர்கள் சரோஜா அமுதன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/