தஞ்சை மே 16: கொரோனா நிவாரண நிதி வாங்க நான்குமணி நேரமாக சமூக இடைவெளியின்றி பயனாளிகள் காத்திருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் முதல்கட்ட தவணை தொகை 2000 ரூபாய் நேற்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

ரேசன் கடைகளிலும் காலை முதலே வழங்கப்பட்டு வந்த நிலையில் தஞ்சை காவேரி சிறப்பங்காடியில் உள்ள ரேஷன் கடையில் நிவாரண நிதி வாங்க வந்தவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் வராததால் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளி இன்றி அருகருகே அமர்ந்திருந்தனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நான்கு மணி நேரமாக ஒரே இடத்தில் அருகருகே அமர வைத்து இருந்தது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.