தஞ்சாவூர் சூலை: 25- தஞ்சை அருகே சோழர் காலத்தில் கட்டப்பட்ட செங்கழுநீர் ஏரியை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூர்வாரிய நிலையில் ஏரி முழுவதும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கினார்.

தஞ்சை தாலுகா கள்ளபெரம்பூர் கிராமத்தில் செங்கல் நீர் எனப்படும் கள்ளபெரம்பூர் ஏரி அமைந்துள்ளது 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது மூலம் சுமார் 2, 662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என ஆற்றின் கிளை வாய்க்கால் ஆனந்த காவேரி வைத்தால் கச்சமங்கலம் அணைக்கட்டு மேல் பகுதியில் வலது கரையில் பிரிந்து கள்ளபெரம்பூர் ஏரியில் கலக்கிறது.

கள்ளபெரம்பூர் ஏரியின் நீளம் 3218 மீட்டர் ஆகும், 41. 82 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கள்ளபெரம்பூர் 8 மதகுகள் உள்ளது இது சோழர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பழமையான ஏரியாகும் கடந்த பல ஆண்டாக ஏரி முறையாக பராமரிக்காத நிலையில் ஏரியை நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்கள் ஒன்று கூடி ஏரியின் ஒரு பகுதியில் தூர்வாரும் பணியைத் துவங்கினர். அரசு சார்பில் குடிமராமத்து பணி திட்டத்தில் 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. தற்போது பணிகள் முடிந்து விட்ட நிலையில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது

இதைதொடர்ந்து ஏரியை முழுமையாக பாதுகாக்கும் நிலையில் ஏரி சீரமைப்புக் குழு தலைவர் குலோத்துங்கன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உதயம், செங்கழு நீர் ஏரி சீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தன்னார்வலர்கள், மற்றும் தஞ்சை வசந்தம் லயன்ஸ் நிர்வாகம் மற்றும் சிலம்பம் பயிலும் மாணவர்கள் கிராம மக்கள் 5,000 பனை விதை நடவு செய்தல் 5,000 மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணியை துவங்கினார் இந்தப் பணி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/