தஞ்சை விமான நிலையத்தின் அருகேயுள்ள நெல் சேமிப்பு கிடங்கு, தஞ்சை ரயில்வே தானிய கிடங்குள்ள பகுதி, மற்றும் பள்ளி அக்ரஹாரம், மாரியம்மன் கோயில் கும்பகோணம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் சுமையுந்துகளில்(லாரி) பேட்டரி மற்றும் டீசல் திருடு போயி வருகின்றது.
இந்த திருடர்கள் ஆட்டோ மற்றும் கார்களில் வந்து இந்த பேட்டரி மற்றும் டீசல் திருடு போயி வருவதாகவும், இந்த திருட்டு தொடர்ந்து 20 நாட்களாக நடைபெற்று வருகிறது இதுவரை 39 வாகனங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதனால் லாரி ஒட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு மட்டுமின்றி தாங்கள் நேரத்திற்கு புறப்பட முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர், பாதிக்கப்பட்ட லாரி டிரைவர்கள் இது தொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.