தஞ்சை மே 21 தஞ்சை மாவட்டத்தில் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது இதனால் பல்வேறு பகுதிகளில் 5,000 வாழைகளுக்கு மேல் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. நேற்றிரவு பெய்த கனமழையால் தஞ்சாவூர் அடுத்த குலமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

இதில் விக்னேஷ் என்ற விவசாயி 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5,000 வாழைகளை முற்றிலும் முறிந்து விழுந்ததால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை சேதம் என விவசாயிகள் வேதனை. அதேபோல திருவையாறு அடுத்த சாத்தனூர் பகுதியில் மதியழகன் என்ற விவசாயி நான்கு ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் முற்றிலும் அழிந்து சேதம் ஏற்ப்பட்டுள்ளது.

செய்தி க,சசிகுமார் நிருபர்.
தஞ்சை.