தஞ்சாவூர் ஜனவரி 5 தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாலாஜி நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது இந்த டாஸ்மாக்கால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவருகிறது.

அந்த வழியே கடந்து செல்லும்போது குடிபோதையில் சிலர் கேலியும் கிண்டலும் செய்வதும் வருகின்றனர் எனவே உடனடியாக டாஸ்மாக் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இதுநாள் வரை இடமாற்றம் செய்யப்படாததால் நேற்று காலை டாஸ்மாக் கடை முன்பு திரளான பொதுமக்கள், பெண்கள் ஒன்றுகூடி டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன, தகவல் அறிந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாலாஜி நகர்வாசிகள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்