தஞ்சை ஏப்ரல் 16 தஞ்சை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் முன்பு 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி தஞ்சை நகர் டவுன் டிஎஸ்பி பாரதிதாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி கோட்ட பொறியாளர் வேணுகோபால், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உதவி பொறியாளர்கள் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பேரணி தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது தலைக்கவசம் அணிய வேண்டும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது, மது அருந்திவிட்டு எந்த வாகனங்களும் ஓட்டக்கூடாது, உள்ளிட்ட அறிவுரை அறிவுரைகளை அப்போது வான வாகனங்களில் சாலையில் பயணித்த அவர்களிடமும் பொதுமக்களிடமும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.