பேராவூரணி: தீத் தொண்டு வாரத்தை ஒட்டி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தீயணைப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்.14 முதல் ஏப்.20ம் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தீயணைப்பு துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிறைவுநாளில் பேராவூரணி கடைவீதி, பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், தீ தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பது, தீ விபத்துகளை தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் செவிலியர்கள், பணியாளர்களுக்கு தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி, தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், பெரிய தீ விபத்து , சிறிய தீ விபத்து ஏற்பட்டால், தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், சரவணமூர்த்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலுார்