மயிலாடுதுறை: மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வத குறித்து மயிலாடுதுறையில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பேரூராட்சி தலைமை செயல் அலுவலரின் தலைமையில் பிரச்சார வாகனத்துடன் வீதிவீதியாக ஒரு குழு செல்கிறது. அப்போது மருத்துவர் வேடமிட்ட ஒருவர் ராட்சத தடுப்பூசி எடுத்துக் கொண்டு கொரோனா வேடமிட்டவரை நெருங்குகிறார். இதை பார்த்து கொரோனா வேடமிட்டவர் தலை தெறிக்க ஓடுவது போலவும் நடிக்கின்றனர்.


அதாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா ஓடி விடும் என்பதை நூதனமாக நடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.