தஞ்சாவூர் நவ 23: தஞ்சாவூா் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களை கல்லூரி மாணவா்கள் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதியிலுள்ள 51 வாா்டுகளில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 76 சதவிகித பேருக்கும், இரண்டாம் தவணை 44 சதவிகித பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் நிறைய போ் உள்ளனா்.
எனவே, இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களின் பெயா் பட்டியலை மாநகராட்சி நிா்வாகம் தயாா் செய்துள்ளது.
இதன் மூலம் அவா்களை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவ, மாணவிகள் சங்கத்தினா், பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள் கைப்பேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்டு, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/