தஞ்சை பிப்.12:தஞ்சை மாவட்ட தொடக்கநிலை இடையிட்டு சேவைகள் மையம் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் பிறவி இதயக் குறைபாடு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது முகாமை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள் அதற்கு முன்பும் கூட மிக சிறப்பாக பணியினை செய்து வருகின்றீர்கள் காலத்தில் சவாலாக பணியாற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சை செய்வதற்காக ரூபாய் பதினேழு கோடி மதிப்பீட்டில் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன மேலும் இந்த மருத்துவ முகாம் மிக முக்கியமானது குழந்தைகள் பல்வேறு நோயினால் பிறப்பிலேயே பாதிக்கப்படுகின்ற போது பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர் இதனால் அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை.

பிறவி இருதய குறைபாடு 1000 குழந்தைகளில் 9 குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பிறவி இருதய குறைபாடு குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது ஆரம்பத்திலேயே இதனை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது அதனால் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்து அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள் எடை கூடாமல் இருத்தல், மூச்சுத் திணறல், அடிக்கடி சளி பிடித்தல், தாய்ப்பால் குடிக்கும் போது சிரமப்படுதல், அல்லது நெற்றி வியர்த்தல், அதிக உடல் சோர்வு காணப்படுதல், விளையாடும் பொழுது அதிகமாக மூச்சு வாங்குதல் போன்ற குறைபாடுகள் இருந்தால் டாக்டர் அணுகி சிகிச்சை பெறவேண்டும் என அவர் கூறினார்.

இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மருது துரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சிங்காரவேலு மருத்துவக் கல்லூரி நிலைய அலுவலர்கள் ஞான செல்வம் உஷா தேவி குழந்தைகள் நல இருதய மருத்துவர் மணி ராமகிருஷ்ணா இந்திய மருத்துவ கழக தஞ்சை மைய தலைவர் டாக்டர் சசிராஜ் குழந்தைகள் நல மருத்துவர்பாபாலமுருகன் டாக்டர் கீர்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.