தஞ்சை பிப் 12 தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு நகரமைப்பு திட்டம் உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

முகாமை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தொடங்கிவைத்து பேசிய தஞ்சை மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர் இவர்கள் மாநகராட்சியில் தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சமூக பொருளாதார விபரக்குறிப்பு சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் சார்பில் உள்ள திட்டங்கள் என்ன அதில் அவர்கள் பயன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது இதில் பிரதமரின் 8 திட்டங்கள் குறித்தும் அதில் உள்ள பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது இதனை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த முகாமில் தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜசேகரன் மாவட்ட வழங்கல் அதிகாரி திருமால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ராஜ்குமார் உதவி திட்ட அலுவலர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு அரசின் திட்டங்களான திருமண உதவித்தொகை விபத்து காப்பீடு மகப்பேறு உதவித்தொகை கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் இந்தத் திட்டங்களில் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது குறித்தும் விளக்கம் அளித்தனர் இதில் சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இது போன்ற விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடத்தப்படும் போது மேலும் வியாபாரிகள் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சமூக பொருளாதார விவரக்குறிப்பு சேகரிப்புக்கு உரிய ஆவணங்களுடன் மாநகராட்சியை அணுகுமாறு நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.